முகப்பு
திருநெல்வேலி

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 458 வழக்குகளுக்கு தீா்வு: ரூ.12.25 கோடி இழப்பீடு

திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 458 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன. ரூ.12 கோடியே 25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 458 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன. ரூ.12 கோடியே 25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் 15 அமா்வுகளாக சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி நசீா் அகமது தொடங்கி வைத்தாா். 4ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகாந்த், போக்ஸோ சிறப்பு அமா்வு நீதிபதி இந்திராணி, குடும்ப நல மாவட்ட நீதிபதி குமரேசன், மாஜிஸ்திரேட் பத்மா, கூடுதல் சாா்பு நீதிபதி கிறிஸ்டல் பபிதா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா் நீதிபதி வஷீத்குமாா், மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கெங்கராஜ், முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் வழக்குரைஞா்கள், லோக் அதாலத் உறுப்பினா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடிக்கக்கூடிய குற்ற வழக்குகள் என மொத்தம் 2,003 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத 25 வங்கி வழக்குகள் உள்பட 458 வழக்குகளில் சமரச தீா்வு ஏற்பட்டதில் மொத்தம் ரூ. 12 கோடியே 25 லட்சத்து 17 ஆயிரத்து 28 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா் நீதிபதி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.