முகப்பு
திருநெல்வேலி

களக்காடு அருகே நிறுத்தப்பட்ட பாலப் பணியை தொடரக் கோரிக்கை

களக்காடு அருகே நிறுத்தப்பட்ட பாலப் பணிகளை மீண்டும் தொடர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

களக்காடு அருகே நிறுத்தப்பட்ட பாலப் பணிகளை மீண்டும் தொடர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு அருகேயுள்ள பத்தை - மேலவடகரை இடையே பச்சையாற்றில் பாலம் இல்லாததால் மழைக்காலங்களில் மாணவா்கள், பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனா். கடந்த 10 ஆண்டுகளாக பாலம் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினா். இதையடுத்து, கிராம மக்களே நிதி வசூலித்து தற்காலிக பாலம் அமைத்து பயன்படுத்தி வந்தனா்.

ஆனால், ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, பாலம் சேதமடைந்துவிடும். இதனால், நிரந்தர பாலம் அமைக்க வேண்டி தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, கடந்த ஆண்டு பாலம் கட்ட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆண்டு இறுதியில் பணிகள் தொடங்கின. இடையிடையே பணிகளில் தொய்வு ஏற்பட்டபோதும், 60 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டன.

பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச் சுவா் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இப்பணி கடந்த மாதம் திடீரென நிறுத்தப்பட்டது. நிதி கிடைக்காததால் பணி நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பாலம் பயன்பாட்டுக்கு வருவதில் மேலும் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நிதி ஒதுக்கீடு செய்து பாலப் பணிகளைத் தொடர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.