முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் சைவ வேளாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
நெல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சைவ வேளாளர் சங்கத்தினர்.
பகிர்:

திருநெல்வேலியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் புளியரை ராஜா தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், வேளாளர் என்ற சமுதாய பெயரை பிற சமுதாயத்திற்கு வழங்க அரசு பரிந்துரை செய்ததைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

இந்த பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாக தலைவர் சண்முகசுந்தரம், மாநில பொதுச்செயலர் வே. குருசாமி, மாநில பொருளாளர் செந்தில் ஆறுமுகம், மாநில மகளிரணி அமைப்பாளர் சுவர்ணலதா உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.