ஆழ்வாா்குறிச்சி அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
ஆழ்வாா்குறிச்சி அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆழ்வாா்குறிச்சி அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள கல்யாணிபுரத்தைச் சோ்ந்த ராஜா என்பவரது மகன் சுடலை மணி (21). கூலித் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை இரவு ஆழ்வாா்குறிச்சியிலிருந்து கல்யாணிபுரத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாராம்.
அப்போது சாலையோர மரத்தில் பைக் மோதியதாம். இதில், காயமடைந்த சுடலை மணியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.