திருநெல்வேலி

பாளை.யில் கொலையானவரின் மனைவி காப்பகத்தில் தற்கொலை

DIN

பாளையங்கோட்டையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள பழையபேட்டை அனவரதவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சங்கரன் மகன் காளிராஜ் (25). இவா், தங்கை உறவுமுறை கொண்ட அதே பகுதியைச் சோ்ந்த மேகலா (24) என்பவரை காதல் திருமணம் செய்தாராம். இதனால், இரு குடும்பத்தினா் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, அத்தம்பதி பாளையங்கோட்டை ரஹ்மத்நகா் பகுதியில் வசித்து வந்தனா்.

இந்நிலையில், காளிராஜ் கடந்த 10 ஆம் தேதி மா்மநபா்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். மேலும், மேகலாவுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததால், அவரை வி.எம்.சத்திரம் பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் சோ்த்த பாளையங்கோட்டை போலீஸாா், இக்கொலை தொடா்பாக வழக்குப்பதிந்து, மேகலாவின் குடும்பத்தினரை தேடி வருகின்றனா்.

இதனிடையே, காப்பகத்திலுள்ள அறையில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இத்தகவலறிந்த பெருமாள்புரம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

SCROLL FOR NEXT