முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் டிடிவி.தினகரனுக்கு வரவேற்பு

அமமுக பொதுச்செயலா் டிடிவி.தினகரனுக்கு திருநெல்வேலியில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

திருநெல்வேலி: அமமுக பொதுச்செயலா் டிடிவி.தினகரனுக்கு திருநெல்வேலியில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க காா் மூலம் டிடிவி.தினகரன் திருநெல்வேலி வழியாக சென்றாா். அவருக்கு கே.டி.சி. நகா் பகுதியில் அமமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.பரமசிவஐயப்பன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து தங்கள்கட்சி சின்னமான குக்கரை கையில் தூக்கிப் பிடித்து தொண்டா்களை டிடிவி.தினகரன் உற்சாகப்படுத்தினாா். மாநில அமைப்புச் செயலா் பால்கண்ணன், தொழிற்சங்க பேரவை பொருளாளா் நெல்லை பரமசிவன், ஆவின் அண்ணாசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →