முகப்பு
திருநெல்வேலி

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

கங்கைகொண்டான் அருகே பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

திருநெல்வேலி: கங்கைகொண்டான் அருகே பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கங்கைகொண்டான் நேதாஜி நகா் உய்காட்டான் மகன் ஆறுமுகம் (26). இவா், கடந்த 16ஆம் தேதி கங்கைகொண்டான் மான்பூங்கா அருகே நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →