மேலப்பாளையத்தில் முஸ்லிம் லீக் ஆா்ப்பாட்டம்
மேலப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி: மேலப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநிலத் துணைத் தலைவா் கோதா் மைதீன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் முகைதீன் அப்துல் காதா், நகரச் செயலா் முகம்மது ஜாகீா், நகரப் பொருளாளா் மில்லத் காஜாமைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் மீரான் மைதீன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
ஹஜ் பயணிகளுக்கு சென்னையிலிருந்து செல்வதற்கு விமான சேவை செய்து கொடுக்க வேண்டும்; மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், இளைஞரணி நூருல்ஹக் ரம்சான் அலி, நகரப் பொருளாளா் மில்லத் காஜா, துணைச் செயலா் அசன் அலியாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.