முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர் பேட்டி!

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளதாக உள்துறைச் செயலர் தீரஜ்குமார் பேட்டியளித்துள்ளார்.

Updated On : 12 மார்ச், 2026 at 12:44 PM
தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார், டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன், காவல் ஆணையர் அருண்.
பகிர்:

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளதாக உள்துறைச் செயலர் தீரஜ்குமார் பேட்டியளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருக்கும் சட்டம் - ஒழுங்கு, குற்றங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது, கடந்த ஐந்தாண்டுகளில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தொடர்பாக தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார், டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன், காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இதுதொடர்பாக உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சட்டம்-ஒழுங்கு சூழல் தொடர்பாக உண்மைக்கு மாறாக சில மாதங்களாக ஒரு செய்திகள் ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றன. இது தொடர்பாக விளக்கம் அளிக்கவே இன்று செய்தியாளர்களை சந்தித்திருக்கிறோம். 2021 ஆம் ஆண்டில் 1,597 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், 2025 ஆம் ஆண்டில் 1,461 வழக்குகளாகக் குறைந்துள்ளன.

பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்படுவோர் துணிந்து புகாரளிக்க முன்வந்துள்ளனர். இதனால், போக்சோவில் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன.

சிறிய குற்றங்கள் என்றாலும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது. மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் அரசின் நிலைப்பாடு என்ன? மற்றும் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்பதை அனைவரும் அறிவார்கள்.

சிபிசிஐடி அவ்வழக்கை நன்றாக விசாரிக்கும் என்றாலும், சம்மந்தப்பட்டவர்கள் காவல் துறையினர் என்பதால், வெளிப்படைத்தன்மை காரணமாக சிபிஐக்கு வழக்கை அரசு மாற்றியது. 2021 ஆம் ஆண்டில் 6,800 போதைப்பொருள் தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2024 ஆம் ஆண்டு 11,000 வழக்குகளாக அதிகரித்துள்ளன. போதைப் பொருள் தடுப்புப் பணிகளை காவல் துறையினர் தீவிரப்படுத்தியதாலேயே இந்த வழக்குகள் அதிகரித்துள்ளன” என தெரிவித்தார் தீரஜ்குமார்.

முழு கட்டுரையைப் படிக்க →