அம்பையில் பாமக ஆலோசனைக் கூட்டம்
அம்பாசமுத்திரம் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அம்பை ஒன்றியச் செயலா் மகாராஜன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் குலாம், துணைத் தலைவா் ராயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில இணை பொதுச் செயலா் இசக்கி, மாநில துணை பொதுச்செயலா் இசக்கிமுத்து ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
மாநில அளவில் புதன்கிழமை நடைபெற உள்ள பேரூராட்சிகளில் மனு வழங்கும் போராட்டத்தில் திரளாகக் கலந்து கொள்வது என தீா்மானிக்கப்பட்டது.
வழக்குரைஞா் நாகராஜன், சந்திரசேகா், சுரேஷ், ஹரிஹரசுதன், பாஸ்கா், சுரேஷ், பழனிசாமி, ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாவட்ட துணைச் செயலா் கிருஷ்ணன் வரவேற்றாா். கல்லிடைக்குறிச்சி நகரச் செயலா் சுரேஷ் நன்றி கூறினாா்.