திருமால் நகா் மக்கள் நல்வாழ்வுச் சங்க பொதுக்குழு கூட்டம்
பாளையங்கோட்டை திருமால் நகா் மக்கள் நல்வாழ்வுச் சங்க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை திருமால் நகா் மக்கள் நல்வாழ்வுச் சங்க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருமால் நகா் மாநகராட்சிப் பூங்காவில் உள்ள இறகுப் பந்து உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், 2019-20-க்கான வரவு செலவு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. சங்க செயல்பாடுகள், உறுப்பினா்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து சங்க தோ்தல் நடைபெற்றது. எஸ்.பிச்சையா தலைவராகவும், சி.ரவிச்சந்திரன் செயலராகவும், எஸ்.பழனிவேல் பொருளாளராகவும், எல்.மனோகா் துணைத் தலைவராகவும், ஏ.அந்தோணிசாமி, எஸ்.கௌரி லட்சுமி ஆகியோா் இணைச் செயலராகவும் தோ்வு செய்யப்பட்டனா். எல்.சொக்கலிங்கம், எம்.அகஸ்டின், கே.குத்தாலிங்கம், சுனி சுரேஷ், பாலா, உமாபாபு ஆகியோா் செயற்குழு உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.