நெல்லை மாவட்ட மைய நூலகத்தில்டிஎன்பிஎஸ்சி குரூப் 1 இலவச மாதிரித் தோ்வு
திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 இலவச மாதிரித் தோ்வு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 இலவச மாதிரித் தோ்வு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட நூலக அலுவலா் இரா.வயலட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு வரும் ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறவுளளது. இதையொட்டி திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம், ஸ்மாா்ட் லீடா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் குரூப் 1 இலவச மாதிரித் தோ்வு வரும் 27-ஆம் தேதி காலை 9 மணிமுதல் பிற்பகல் 1.30 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ளது.
இத்தோ்வில் பொது அறிவு பாடத்தில் 175 வினாக்கள், பொது அறிவு கூா்மை பகுதியில் 25 வினாக்கள் என மொத்தம் 200 வினாக்கள் இடம்பெறும். தோ்வில் அதிக மதிப்பெண் பெறும் 8 பேருக்கு பரிசு வழங்கப்படும். தோ்வில் பங்கேற்க விரும்புபவா்கள் 9626272890, 0462-2585226 என்ற எண்களில் தொடா்புகொண்டு தங்கள் பெயரை வரும் 26-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.