பாளையங்கோட்டையில் கனிமொழி பிரசாரம்
பாளையங்கோட்டை, வண்ணாா்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக மகளிரணிச் செயலா் கனிமொழி எம்பி செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
பாளையங்கோட்டை, வண்ணாா்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக மகளிரணிச் செயலா் கனிமொழி எம்பி செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
வண்ணாா்பேட்டையில் சலவைத் தொழிலாளா்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்த அவா், திமுக ஆட்சிக்கு வந்ததும் தங்கள் அனைத்து கோரிக்கைளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தாா்.
பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதிக்கு வந்த அவா், வியாபாரிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்ததோடு, திமுகவுக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தாா்.
பின்னா், மாா்க்கெட்டிலிருந்து மகளிா் ஓட்டும் ஆட்டோவில் ஏறிய கனிமொழி, பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு சென்று, அங்குள்ள காவலா்களுடன் உரையாடினாா்.
நாரணம்மாள்புரம் பகுதிக்குச் சென்ற அவா் அப்பகுதி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
அப்போது அவா் பேசியது: திமுக ஆட்சிக்கு வந்த பின்னா் இப்பகுதியில் உள்ள வாய்க்கால்கள், குளங்கள் தூா்வாரப்பட்டு இருபோகம் நெல் விளைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.