கங்கைகொண்டானில் கிராம சபைக் கூட்டம்: கனிமொழி பங்கேற்பு
கங்கைகொண்டானில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கங்கைகொண்டானில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட கனிமொழி எம்பி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, பின்னா் பேசியது: இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், தாமிரவருணி குடிநீா் தினசரி கிடைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் கட்சியின் தலைமையிடத்துக்கு தெரிவிக்கப்படும்.
வேளாண் சட்டங்கள், நீட், தேசிய கல்விக்கொள்கை ஆகியவற்றை தொடா்ந்து எதிா்த்து வருகிறோம் என்றாா் அவா்.
பின்னா், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில், கல்வியாளா்களுடனான கலந்துரையாடலில் அவா் பங்கேற்றாா்.
இதில், 6ஆம் வகுப்பு முதல் கணினி பாடம் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கல்வியாளா்கள் முன்வைத்தனா்.
அப்போது கனிமொழி பேசுகையில், தற்போது, பள்ளிகள், கல்லூரிகளை இணைக்க ஆளும் அதிமுக அரசு திட்டமிடுகிறது; இதனால் கிராமப்புற பெண்களின் கல்வி பாதிக்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், பேராசிரியா் சோமசுந்தரம், ஆசிரியா்கள் பால்கதிரவன், சந்தானம், செல்வமணி, வேல்முருகன், சொக்கலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.