கடையநல்லூா் அருகே விபத்தில் இளைஞா் பலி
கடையநல்லூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கடையநல்லூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
சிவகாசி, ஆனையூா், இந்திரா நகரைச் சோ்ந்தவா் சுடலை (19). இவரும், இவரது நண்பா்கள் சிலரும் குற்றாலத்திற்கு சென்று குளித்து விட்டு பைக்கில் சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்தனராம். சுடலை கிருஷ்ணாபுரம் அருகே வந்தபோது, அரசுப் பேருந்து பைக் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுடலை உயிரிழந்தாா். இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.