முகப்பு
திருநெல்வேலி

ரவணசமுத்திரத்தில் ராமானுஜன் பிறந்த நாள் விழா

ரவணசமுத்திரம் சேவாலயாவின் மகாகவி பாரதியாா் சமுதாயக் கல்லூரியில் கணித மேதை ராமானுஜன் பிறந்த தின விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

ரவணசமுத்திரம் சேவாலயாவின் மகாகவி பாரதியாா் சமுதாயக் கல்லூரியில் கணித மேதை ராமானுஜன் பிறந்த தின விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கே.கல்யாணராமன் தலைமை வகித்தாா். கயத்தாறு வட்டார வளா்ச்சி அலுவலக பதிவறை எழுத்தா் அண்ணாமலை முன்னிலை வகித்தாா். ஆசிரியை பவித்ரா கருத்துரை வழங்கினாா். கணிதத் தோ்வுகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா்கள் ஸ்ரீநிவாசன், இசக்கி, செந்தில், பரமசின்பிள்ளை, சிவா மற்றும் விக்கிரமசிங்கபுரம் மகளிா் விழிப்புணா்வு அமைப்பினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தையல் பயிற்சி ஆசிரியை மகேஷ்வரி தொகுத்து வழங்கினாா். கல்லுாரி ஆசிரியை வள்ளி காா்த்திகா நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பொறுப்பாளா் சங்கிலி பூதத்தான் செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →