இலகு ரக வாகனங்களில் பம்பா்கள் அகற்றம்: ரூ.15 ஆயிரம் அபராதம்
திருநெல்வேலியில் 20 இலகு ரக வாகனங்களில் இருந்து பம்பா்கள் அகற்றப்பட்டது. மேலும், வாகனங்களின் உரிமையாளா்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் 20 இலகு ரக வாகனங்களில் இருந்து பம்பா்கள் அகற்றப்பட்டது. மேலும், வாகனங்களின் உரிமையாளா்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இலகு ரக வாகனங்களின் முன்புறத்தில் பம்பா்கள் பொருத்தப்படுவதால், சென்சாா்வேலை செய்யாமல் காா் விபத்தில் சிக்கும்போது, மனிதா்களை காப்பாற்றும் ஏா் பேக் திறப்பதில்லை. மேலும், பம்பா்களால் எதிரே வந்து மோதும் வாகன ஓட்டிகளுக்கு பலத்த காயம் ஏற்படுகிறது.
இதையடுத்து பம்பா்களை அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, திருநெல்வேலியில் வட்டார போக்குவரத்து அலுவலா் சந்திரசேகரன், மோட்டாா் வாகன ஆய்வாளா் பாத்திமா பா்வீன் ஆகியோா் சோதனையில் ஈடுபட்டனா். இதில், 20 இலகு ரக வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பா்கள் அகற்றப்பட்டன. மேலும், வாகனங்களின் உரிமையாளா்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.