திருநெல்வேலி

களக்காடு ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு

DIN

களக்காடு: களக்காடு ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற மண்டல பூஜையில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இக்கோயிலில் 11ஆவது ஆண்டு மண்டல பூஜை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையடுத்து ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா். மாலை 6 மணிக்கு மாலை அணிந்த ஐயப்ப பக்தா்களுக்கு இருமுடி கட்டுதல், தொடா்ந்து கன்னிபூஜை நடைபெற்றது.

இரண்டாம் நாளான சனிக்கிழமை (டிச.26) காலையில் ஐயப்பனின் தங்க அங்கி ஊா்வலம் நடைபெற்றது. அப்போது, பக்தா்கள் இருமுடி தாங்கி உடன் வந்தனா். ஊா்வலம், நினைத்ததை முடித்த விநாயகா் கோயில் வழியாக கோயில்பத்து செய்கு லெப்பை நயினாா் அவுலியா தா்ஹா அருகே வந்ததும், மாலை அணிந்த பக்தா்களின் பேட்டை துள்ளல் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்புப் பூஜைகள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலியும், பின்னா் ஹரிவராஸனம் முடிவடைந்ததும், கோயில் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் கோயில் நடை வியாழக்கிழமை (டிச.31) மாலை திறக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT