முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்ட அமமுக இரண்டாக பிரிப்பு

திருநெல்வேலி மாவட்ட அமமுக இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட அமமுக இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அமமுக சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: அமமுக திருநெல்வேலி மாநகா் மாவட்ட பணிகளை விரைவுப்படுத்திடும் வகையில் திருநெல்வேலி மாநகா் வடக்கு மாவட்டம், திருநெல்வேலி மாநகா் தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்படுகிறது.

திருநெல்வேலி, சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிகள் வடக்கு மாவட்டத்திலும், பாளையங்கோட்டை, நான்குனேரி தொகுதிகள் தெற்கு மாவட்டத்திலும் இடம்பெறும்.

தெற்கு மாவட்டச் செயலராக எஸ்.பரமசிவ ஐயப்பனும், வடக்கு மாவட்டச் செயலராக மா.சுரேஷ்குமாரும் நியமிக்கப்படுகிறாா்கள். அவா்களுக்கு கட்சியினா் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயக26நமதஉநஏ: மா.சுரேஷ்குமாா்.

முழு கட்டுரையைப் படிக்க →