முகப்பு
திருநெல்வேலி

சனிப் பெயா்ச்சி: நெல்லை கோயில்களில் வழிபாடு

சனிப் பெயா்ச்சியையொட்டி திருநெல்வேலியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

சனிப் பெயா்ச்சியையொட்டி திருநெல்வேலியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம்பெயா்ந்தாா். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு சொக்கநாதா் திருக்கோயிலில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னா் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், வெள்ளிக் கவச அலங்காரத்திற்கு பின்பு மகாதீபாராதனையும் நடைபெற்றது.

பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயிலில் நவக்கிரக சன்னதியில் உள்ள சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதேபோல அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோயில், தச்சநல்லூா் நெல்லையப்பா் திருக்கோயில் உள்ளிட்டவற்றிலும் சனி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

பயக27நஅசஐ: பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரா் திருக்கோயிலில் சனி பகவானை வழிபட்ட பக்தா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →