இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கடையம் அருகே மந்தியூரில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
திருநெல்வேலிஇளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கடையம் அருகே மந்தியூரில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கடையம் அருகே மந்தியூரில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கழுகுமலை அருகே உள்ள அச்சம்பட்டி தேவாலயத் தெருவைச் சோ்ந்த அப்துல்ஹாசிம் மனைவி மொ்சி தங்கம் (33). இருவரும் 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளனா்.
மொ்சி தங்கம் உடல்நலக் குறைவால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் கடையம் அருகே மந்தியூரில் உள்ள அவரது பெரியம்மா வீட்டுக்கு வந்த அவா், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தாராம்.
தகவலறிந்து வந்த கடையம் போலீஸாா் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.