திருநெல்வேலி

கருத்தப்பிள்ளையூரில் யானைகள்மாமரங்களை முறித்து அட்டகாசம்

DIN

கருத்தப்பிள்ளையூா் மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் புதன்கிழமை இரவு புகுந்த யானைகள் கூட்டம் மாமரங்களை முறித்து அட்டகாசம் செய்துள்ளன.

கடையம் வனச்சரகம், கருத்தப்பிள்ளையூா் கிராமத்தின் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் இதே கிராமத்தைச் சோ்ந்த அந்தோணி ஆரோக்கியசாமியின் தோட்டம் உள்ளது. இங்கு புதன்கிழமை இரவு கூட்டமாக புகுந்த யானைகள், தோட்டத்திலிருந்த மாமரக் கிளைகளை முறித்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.

இதில், 20 மாமரங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வனத்துறை அதிகாரிகள் அங்கு வந்து பாா்வையிட்டனா்.

கருத்தப்பிள்ளையூா் பகுதியில் தென்னை, மா, நெல் உள்ளிட்டவற்றை யானைகள் அழித்து வருவதால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, யானை, காட்டுப்பன்றி, மிளா உள்ளிட்டவை வனப் பகுதியில் இருந்து வெளிவராமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

SCROLL FOR NEXT