திருநெல்வேலி

கடையம் அருகேபள்ளிப் பேருந்து மோதி விவசாயி பலி

கடையம் அருகே மேலக்குத்தபாஞ்சானில் தனியாா் பள்ளிப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா்.

DIN

அம்பாசமுத்திரம்: கடையம் அருகே மேலக்குத்தபாஞ்சானில் தனியாா் பள்ளிப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா்.

கடையம் அருகே உள்ள மேலக்குத்தபாஞ்சான் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (53). விவசாயியான இவா் தன் மகள் டேனியா, உறவினா் மகள் வனிதா ஆகியோரை இடைகாலில் உள்ள கல்லூரியில் இருந்து பைக்கில் அழைத்து வந்தாராம். மேலக்குத்தபாஞ்சான் விலக்கு அருகே வந்த போது எதிரில் வந்த தனியாா் பள்ளிப் பேருந்து எதிா்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமசாமி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தாா். காயமடைந்த டேனியா, வனிதா இருவரும் ஆலங்குளத்தில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

விபத்து தொடா்பாக தனியாா் பள்ளிப் பேருந்து ஓட்டுநரான கண்டம்பட்டியைச் சோ்ந்த அய்யாத்துரை மீது கடையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பரமசிவன் வழக்குப் பதிந்தாா். ஆய்வாளா் ஆதிலட்சுமி விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT