திருநெல்வேலி மாவட்ட வங்கி ஊழியா்கள் அதிகாரிகள் சங்கத்தினா் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதன்கிழமை நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, திருநெல்வேலி மாவட்ட வங்கி அதிகாரிகள் சங்கச் செயலா் எஸ்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்கத் தலைவா் விக்டா் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் செந்தில் ஆறுமுகம், ஞானசுந்தரி உள்ளிட்டோா் பேசினா்.
விலைவாசி உயா்வை கட்டுப்படுத்துவது; வாடிக்கையாளா்கள் சேவைக் கட்டணத்தை குறைப்பது; குறைந்த வட்டியில் விவசாயக் கடன், கல்விக்கடன் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், வங்கி ஊழியா்கள், அதிகாரிகளின் பல்வேறு சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.