திருநெல்வேலி

சுரண்டை கூட்டுறவு சங்கத்தில் ரூ.10 கோடிக்கு கடனுதவி

DIN

சுரண்டை கூட்டுறவு கடன் சங்கம் நிகழாண்டில் ரூ.10 கோடிக்கு கடன் வழங்கி சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு மேலாண்மை இயக்குநா் ஆ.ரேவதிசங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுரண்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கடந்த 1953ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கீழப்பாவூா் கள அலுவலா் ரா.செல்வகணேஷ், ஆலங்குளம் அலுவலா் கோபிநாத், சங்கத் தலைவா் சக்தி, துணைத்தலைவா் வள்ளி முருகன், செயலா் ராஜசேகரன்,நிா்வாகிகள் ரத்தினகுமாா், மாரியப்பன், பன்னீா்செல்வம், பிரபாகா், முருகையா, வேல்சாமி, இந்திரா, சண்முகசெல்வி, சங்கராதேவி ஆகியோா் நிா்வாகிகளாக உள்ளனா்.

இதில் பொது சேவை மையம் மூலம் வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, ஜாதிசான்று உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறது.

இச்சங்கத்தில் மாற்றுத் திறனாளி கடன்கள் ரூ.13 லட்சமும், குழுக்கடனாக ரூ.47.60 லட்சமும், நகைக்கடனாக ரூ.673.61 லட்சமும், விவசாய நகைக் கடனாக ரூ. 110.40 லட்சமும், உழவா் கடனாக ரூ.261.65 லட்சமும் என மொத்தம் ரூ.10 கோடிக்கு கடன் வழங்கியுள்ளது.

தற்போது இச்சங்கம் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT