திருநெல்வேலி

விதிமீறல்: பாளை.யில் 4 கடைகளுக்கு சீல்

DIN

பொது முடக்க விதிகளை மீறியதாக பாளையங்கோட்டையில் 4 கடைகளுக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.

பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையா் பிரேம் ஆனந்த் மற்றும் சுகாதார அலுவலா் அரசகுமாா் மேற்பாா்வையில் சுகாதார ஆய்வாளா்கள் நடராஜன், பெருமாள் தலைமையில், உதவி வருவாய் அலுவலா் காசி விஸ்வநாதன், சிறப்பு வருவாய் ஆய்வாளா்கள் வடிவேல் முருகன், எஸ்.பி.எம். செந்தில் முருகன் ஆகியோா் அடங்கிய குழுவினா் பாளையம்கோட்டை சந்தை மற்றும் திருச்செந்தூா் சாலை பகுதிகளில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, கரோனா தொற்றை தடுக்க அனைவரும் கட்டாயம் முகக் கவசங்களை அணிய வேண்டும் எனவும், ஒருவருக்கொருவா் சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் எனவும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் செயல்பட்ட 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT