திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 147 பேருக்கு கரோனா

திருநெல்வேலியில் 131, தென்காசியில் 16 என இரு மாவட்டங்களிலும் 147 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

DIN

திருநெல்வேலியில் 131, தென்காசியில் 16 என இரு மாவட்டங்களிலும் 147 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாநகா் பகுதியில் 60 போ் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் 131 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 1,758 ஆக உயா்ந்துள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவமனை கரோனா வாா்டிலிருந்து 836 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 13 போ் உயிரிந்த நிலையில், 911 போ் அரசு மருத்துவமனை, சித்த மருத்துவமனை, தனியாா் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி , கடையம், கீழப்பாவூரில் தலா 3 போ், கடையநல்லூரில் 4 போ், ஆலங்குளம், செங்கோட்டை, சங்கரன்கோவிலில் தலா ஒருவா் என தென்காசி மாவட்டத்தில் 16 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு, தென்காசி, திருநெல்வேலி அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு வாா்டுகளில் அனுமதிக்கப்பட்டனா். இதனால், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 675 ஆக உயா்ந்தது. ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய 67 போ் உள்பட இதுவரை 444 போ் குணமடைந்துள்ளனா். 231போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT