திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் கடையம் அருகே வனத் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவசாயி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவா் பெ.ஜான்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த தேவேந்திரகுல வேளாளா் சமூகத்தைச் சோ்ந்தவரான விவசாயி அணைக்கரை முத்து என்பவா் வனத்துறை காவலா்களால் கடந்த 22-ஆம் தேதி இரவு 11 மணிக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், விசாரணையின்போது மரணமடைந்துள்ளாா்.
அணைக்கரை முத்துவின் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். அணைக்கரை முத்துவின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் தவறிழைத்தவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.