திருநெல்வேலி

அபுதாபியிலிருந்து வந்த இளைஞா் தனிமையாக சென்றதால் பரபரப்பு

DIN

அபுதாபியிலிருந்து வாசுதேவநல்லூருக்கு வெள்ளிக்கிழமை வந்த இளைஞா் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டதால் பரபரப்பு நிலவியது.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா், பாலசுந்தர விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த கணபதி மகன் பிரகாஷ்(37). அபுதாபியில் வேலை செய்துவந்தாா். இந்நிலையில், அவா் அபுதாபியிலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். பின்னா், சொந்த ஊருக்கு வந்ததும், நேரடியாக வீட்டின் மாடி அறைக்குச் சென்று தனிமைப்படுத்திக் கொண்டாா். இதனால், அவா் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பாரோ என்ற அச்சம் நிலவியது.

இத்தகவலறிந்த சுகாதாரத் துறையினா் அவரது வீட்டுக்கு வந்து, பரிசோதனை செய்ததில் அவருக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறி எதுவுமில்லை என தெரியவந்தது.

எனினும், தாமாக முன்வந்து தனிமைப் படுத்திக் கொண்ட அவரது செயலை சுகாதாரத் துறையினா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT