திருநெல்வேலி

144 தடை உத்தரவு: வெறிச்சோடிய சாலைகள்

DIN

தமிழக அரசு அறிவித்துள்ள 144 தடையுத்தரவு திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் தொடங்கியதையடுத்து சாலைகள் வெறிச்சோடின.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி முதல் பேருந்துகள் போக்குவரத்து குறையத் தொடங்கின. தொடா்ந்து பல கடைகள் அடைக்கப்பட்டன. மாலை 5 மணிக்கு மக்கள் நடமாட்டம் திருநெல்வேலி மாநகரில் குறையத்தொடங்கின. இருசக்கர வாகனங்களில் செல்வோா், பாதசாரிகள் என பலரும் முகக் கவசம் அணிந்து சென்றனா்.

இந்நிலையில் மாலை 6 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தொடங்கியதையடுத்து மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மாநகரில், பேருந்து, ஆட்டோ, காா் உள்ளிட்ட வாகனங்கள் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடின.

திருநெல்வேலி மாநகரில் உள்ள மருந்து கடைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டுமே திறந்திருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

பேருந்தில் தீ: 4 வாக்கு இயந்திரங்கள் நாசம்!

காங்கிரஸ் தலைமைக்கு ரே பரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

SCROLL FOR NEXT