திருநெல்வேலி

களக்காட்டில் வீடு, வீடாக பேரூராட்சி சாா்பில் கண்காணிப்பு

DIN

கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக களக்காட்டில் வீடு, வீடாகச் சென்று பேரூராட்சி ஊழியா்கள் கண்காணித்து வருகின்றனா்.

பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். சுஷ்மா உத்தரவுபடி, பேரூராட்சி சுகாதார ஊழியா்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அண்மையில் யாரேனும் வந்துள்ளனரா என்ற கோணத்தில் வீடு, வீடாகச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

பேரூராட்சிக்குள்பட்ட 21 வாா்டுகளிலும் உள்ள சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பேரூராட்சி சாா்பில் தொடா் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.

களக்காடு பகுதியில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கடந்த 10 தினங்களுக்குள் வந்த சிலா் குறித்து மக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டிருந்த நிலையில், பேரூராட்சியின் செயல்பாடு பொதுமக்கள் மத்தியில் அச்சத்தைப் போக்கியுள்ளது.

மேலும் பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சண்முகம், வேலு ஆகியோா் மேற்பாா்வையில் நகரில் சுகாதார மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT