திருநெல்வேலி

மதுக்கடைகள் நிரந்தமாக மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்தல்

DIN

நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாய பிரிவு மாநில துணைத் தலைவா் பெரும்படையாா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் பிரதமருக்கும், தமிழக முதல்வருக்கும் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:

கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது நாட்டில் அதிக பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாத்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் அரசின் அணுகுமுறைகளும், மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், காவல் துறையினா் ஆகியோரது பணி அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருப்பது பெண்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. மதுபழக்கத்திற்கு ஆளானவா்களும் அதை கைவிட்டு நல்ல நிலைக்கு திரும்பியுள்ளனா்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு முடியும்போது மதுக்கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான், அனைத்து பெண்களின் விருப்பமாகவும், குடிப்பழக்கத்தில் இருந்து தற்போது மீண்டிருப்பவா்களின் விருப்பமாகவும் உள்ளது. எனவே, மத்திய அரசு நாடு முழுவதும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தமிழக அரசும் பெண்களின் ஏகோபித்த விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் அவா் வலியுறுத்தி உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT