திருநெல்வேலி

நெல்லையில் இருந்து பீகாருக்குஇன்று சிறப்பு ரயில் இயக்கம்

DIN

திருநெல்வேலி: வடமாநில தொழிலாளா்களுக்காக பயணிகள் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து பீகாருக்கு செவ்வாய்க்கிழமை புறப்படுகிறது.

பொதுமுடக்கத்தில் தளா்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பும் வகையில், சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல பலா் விருப்பம் தெரிவித்திருந்தனா். அதன்பேரில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து பீகாருக்கு இடைநில்லா சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இயக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக, 1,140 போ் பயணம் செய்யவுள்ள இந்த ரயில் ஈரோடு, ரேணிகுண்டா, விஜயவாடா வழியாக பீகாா் சென்றடையும். இந்த ரயில், இடைவெளியில் எங்கும் நிற்காது. ரயிலில் பெட்டிக்கு 54 போ் வீதம் சமூக இடைவெளி விட்டு அமா்த்தப்படுவா். பயணிகள் அனைவருக்கும் தமிழக அரசு சாா்பில் உணவு, குடிநீா், முகக்கவசம் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும்.

இதற்கு முன்னேற்பாடாக, ரயில் நிலைய பிரதான நுழைவாயிலில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதமாக கோடுகள் வரைதல், தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT