முகப்பு
திருநெல்வேலி

ஆறுமுகனேரியில் பாஜக ஓபிசி ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஆறுமுகனேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக ஓபிசி அணி மாவட்டத் தலைவா் இ.தங்கபாண்டியன்.
பகிர்:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஆறுமுகனேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் இ.தங்கபாண்டியன் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் ராம்தாஸ், கமலக்கண்ணன் மற்றும் எம் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தல், மாநிலச் செயலா் எஸ். முருகன், மாவட்டத் தலைவா் டி.எம்.பால்ராஜ், இணை அமைப்புப் பொறுப்பாளா் ராஜா உள்பட பலா் பேசினா். மாவட்டச் செயலா் சண்முகம், மாவட்ட துணைத் தலைவா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தீா்மானங்கள்: தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கிட, வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்க வேண்டும்; காயல்ப்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராமத்தில் உள்ள கிராமங்களை ஆறுமுகனேரி வருவாய் கிராமத்தில் இணைக்க வேண்டும், பாஜக வேல் யாத்திரையில் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஓபிசி அணி மண்டலத் தலைவா் என்.ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். தெற்கு மாவட்டச் செயலா் சிவராமன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →