அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்! விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடிக்கும் பணி தீவிரம்!
விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடிக்கும் பணிகள் நடைபெற்று வருவது குறித்து...
சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடித்து மறைக்கும் பணிகளும் போஸ்டர்கள் அகற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி நேற்று(மார்ச் 15) அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான எம்எல்ஏ அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்சிகள் சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றும் பணிகள் இன்று காலை முதலே தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுவர் விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடித்து மறைக்கும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரவு முதல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறை சார்பாக பாதுகாப்புக்காக துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள், துப்பாக்கிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, துப்பாக்கி உரிமம் வைத்திருந்தவர்கள் தங்களது துப்பாக்கிகளை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
With the coming into force of the Assembly election code of conduct, the work of painting over wall advertisements and removing posters is in full swing.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.