FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கோல் அடிக்கும் திறன்: மெஸ்ஸியை முந்திய ஜூட் பெல்லிங்கம்!

கால்பந்து உலகக் கோப்பையில் கோல் அடிக்கும் திறனில் மெஸ்ஸியை முந்திய ஜூட் பெல்லிங்கம் குறித்து...

Updated On : 14 ஜூலை 2026, 5:55 pm IST
லியோனல் மெஸ்ஸி, ஜூட் பெல்லிங்கம். - படங்கள்: AFP
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பையில் கோல் அடிக்கும் திறனில் ஆர்ஜென்டீனாவின் லியோனல் மெஸ்ஸியை இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்கம் முந்தியுள்ளார். ஆனால், மெஸ்ஸி 8 கோல்களும் பெல்லிங்கம் 6 கோல்களும் அடித்திருக்கிறார்கள்.

கால்பந்து உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து - ஆர்ஜென்டீனா நாளை இரவு மோதவிருக்கின்றன. இந்த நிலையில், மெஸ்ஸியை முந்திய ஜூட் பெல்லிங்கம் கவனம் ஈர்த்து வருகிறார்.

இந்த உலகக் கோப்பையில் புதியதாக சில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து 0-10 வரையிலான மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

ஒரு போட்டியில் அட்டாக்கிங் (கோல் அடிக்க முயலுதல்), கிரியேட்டிவிட்டி (படைப்பாற்றல் திறனுடன் விளையாடுதல்), டிஃபென்ஸ் (கோல்களை தடுத்தல்) ஆகிய பிரிவுகளில் இந்தப் பட்டியல் ஓவ்வொரு போட்டிக்கும் தயார் செய்யப்படுகின்றன. அதன் ஓட்டுமொத்த பட்டியலும் தனியாக நிர்வகிக்கப்படுகிறது.

இதன்படி அட்டாக்கிங் பட்டியலில் எம்பாபே முதலிடம் வகிக்க, ஜூட் பெல்லிங்கம் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார். மெஸ்ஸி மூன்றாமிடத்துக்கு கீழறங்கியுள்ளார்.

மிட் ஃபீல்டரான ஜூட் பெல்லிங்கம், ஃபார்வேடு வீரர்களுக்கான பட்டியலில் மெஸ்ஸியை முந்தியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த உலகக் கோப்பையில் பெல்லிங்கம் 6 கோல்கள் அடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சிறந்த அட்டாக்கிங் வீரர்களுக்கான பட்டியல்

1. கிளியன் எம்பாபே - 8.97 புள்ளிகள் (பிரான்ஸ்)

2. ஜூட் பெல்லிங்கம் - 8.25 புள்ளிகள் (இங்கிலாந்து)

3. லியோனல் மெஸ்ஸி - 8.07 புள்ளிகள் (ஆர்ஜென்டீனா)

4. எர்லிங் ஹாலண்ட் - 7.53 புள்ளிகள் (நார்வே)

5. ஜோஹன் மன்சம்பி - 7.23 புள்ளிகள் (ஸ்விட்சர்லாந்து)

6. ஓஸ்மானே டெம்பெலே - 7.23 புள்ளிகள் (பிரான்ஸ்)

7. சார்லஸ் டி கெட்டலேரே - 7.13 புள்ளிகள் (பெல்ஜியம்)

8. வினிசியஸ் ஜூனியர் - 7.02 புள்ளிகள் (பிரேசில்)

9. ஹாரி கேன் - 6.91 புள்ளிகள் (இங்கிலாந்து)

10. ஜூலியன் குயினோன்ஸ் - 6.91 புள்ளிகள் (மெக்சிகோ)

summary

Jude Bellingham crossed Lionel Messi in attacking players Top Performers Ranking

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments