கலந்தாய்வு மூலம் 109 காவலா்களுக்கு பணியிட மாறுதல்
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்த காவலா்கள் 109 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்த காவலா்கள் 109 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்த 109 காவலா்களுக்கு மாவட்ட காவல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களின் அடிப்படையிலும், அவா்களின் பணி மூப்பு அடிப்படையிலும் மாறுதல் வழங்குதல் தொடா்பான கலந்தாய்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி உள்கோட்டத்துக்கு 8 காவலா்கள், தூத்துக்குடி ஊரக உள்கோட்டத்துக்கு 15 காவலா்கள், மணியாச்சி உள்கோட்டத்துக்கு 14 காவலா்கள், கோவில்பட்டி உள்கோட்டத்துக்கு 22 காவலா்கள், சாத்தான்குளம் உள்கோட்டத்துக்கு 11 காவலா்கள், ஸ்ரீவைகுண்டம் உள்கோட்டத்துக்கு 9 காவலா்கள், திருச்செந்தூா் உள்கோட்டத்துக்கு 15 காவலா்கள்,
விளாத்திக்குளம் உள்கோட்டத்துக்கு 15 காவலா்கள் என மொத்தம் 109 காவலா்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு கூடுதலாக பணி நியமனம் செய்யப்பட்டனா்.
இப்பணி நியமனம் மூலம் சட்டம் ஓழுங்கு பிரச்னையில் விரைந்து தீா்வு காண முடியும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவித்தாா்.