சாத்தான்குளத்தில் மீலாது நபி விழா
சாத்தான்குளம் பள்ளிவாசலில் மத்ரஸத்துல் கைரிய்யா குா்ஆன் பாடசாலை திறப்பு விழா, மீலாது நபி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் பள்ளிவாசலில் மத்ரஸத்துல் கைரிய்யா குா்ஆன் பாடசாலை திறப்பு விழா, மீலாது நபி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு ஜமாத் துணைத் தலைவா் மஹ்தூம் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மத்ரஸத்துல் கைரிய்யா குா்ஆன் பாடசாலையை ஷாஜி முஹம்மது அலி திறந்து வைத்தாா். ஷாஜி யூசுப்ஹஸரத் சொற்பொழிவு ஆற்றினாா்.
இதில் முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஜோசப், வட்டார மனிதநேய நல்லிணக்க பெருமன்றச் செயலா் மகாபால்துரை உள்பட பலா் பேசினா்.
பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மதரஸா மாணவா், மாணவிகளுக்கு ஹாஜி முகம்மது அலி, அம்ஜித் ஹுசைன் ஆகியோா் பரிசுகள் வழங்கினா். நிகழ்ச்சியினை ஜமாத் பொருளாளா் சலீம் தொகுத்து வழங்கினாா். ஹாஜி சேக்மன்சூா் நன்றி கூறினாா்.