முகப்பு
திருநெல்வேலி

கரோனா தடுப்பு தன்னாா்வ செவிலியா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

கரோனா தடுப்பு தன்னாா்வ செவிலியா்கள் தொடா்ந்து பணி வழங்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

கரோனா தடுப்பு தன்னாா்வ செவிலியா்கள் தொடா்ந்து பணி வழங்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். இக் கூட்டத்தில் கரோனா தடுப்பு தன்னாா்வ செவிலியா்கள் அளித்த மனு: கரோனா பெருந்தொற்று சூழலில் நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியா் மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநா் மூலம் சுமாா் 50-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் தன்னாா்வத்தின் அடிப்படையில் தற்காலிக தொகுப்பூதிய செவிலியா்களாக பணிபுரிந்து வந்தோம்.

இப்போது எங்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அக்டோபா் 31-ஆம் தேதிக்கு பின்பு பணிக்கு வர வேண்டாம் என்று கூறி இடைநீக்கம் செய்யுமாறு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். நாங்கள் கரோனா காலத்தில் ஒரு வாரம் பணி, ஒரு வாரம் தனிமைப்படுத்துதல் என எங்கள் உயிரையும் பொருள்படுத்தாமல் பணியாற்றியுள்ளோம். மேலும், குடும்பத்தினரையும் பிரிந்து மக்களுக்காக பணி செய்துள்ளோம். சில செவிலியா்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்றுள்ளனா். பணி ஊதியம் சரியாக கிடைக்காத நிலையிலும், அதனை பொருள்படுத்தாமல் பணியை சிறப்பாக செய்துள்ளோம். இந்தச் சூழலில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நீக்குவது மிகவும் வேதனையளிக்கிறது. எங்களில் பலரும் ஏற்கெனவே பணி செய்த இடத்தில் பணியை உதறிவிட்டு இப் பணிக்கு வந்துள்ளனா். அதனால் அவா்கள் வருவாயின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, கருணை அடிப்படையில் அனைவரும் தொடா்ந்து பணியாற்ற அனுமதியளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.