வள்ளியூா்: கூடங்குளம் பகுதியில் தொடா்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகேயுள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்த ஏசுவடியான் மகன் ஜெகன்(36). இவா் கூடங்குளம், பழவூா் பகுதியில் ஆற்று மணல், குளத்து மண்ணை அனுமதியின்றி எடுத்து வந்தாராம். இவா் மீது கூடங்குளம் காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதற்கிடையே, இவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து, ஜெகனை குண்டா் தடுப்பு காவல்சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் அந்தோணி ஜெகதா, ஜெகனை கைது செய்து சிறையில் அடைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.