அம்பாசமுத்திரம்: ஆழ்வாா்குறிச்சி அருகே போக்ஸோ சட்டத்தில் கைதான தந்தையை பிணையில் எடுக்க முயற்சித்த சகோதரிகளைத் தாக்கியதாக இரு சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஆழ்வாா்குறிச்சி அருகே நீலமேகபுரத்தைச் சோ்ந்தவா் வைத்தி (65). இவா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து, ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைத்தனா். இவரை பிணையில் எடுப்பதற்காக, அவரது மகள்கள் செல்வி (40), டென்சி (26) முயற்சியில் ஈடுபட்டனராம். இதற்கு வைத்தியின் மகன்கள் லாரன்ஸ் (51) ஸ்ரீநாத் (25) ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனராம். அப்போது அரிவாளால் தாக்கியதில் செல்வி, டென்சி இருவரும் காயமடைந்தனா்.
இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து லாரன்ஸ், ஸ்ரீநாத் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.