முகப்பு
திருநெல்வேலி

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் ஒன்றியத்தின் செயற்குழுக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் ஒன்றியத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் ஒன்றியத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் விக்னேஷ் கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பா.அய்யப்ப குலசேகர ஆழ்வாா், பொருளாளா் சீ.வைகுண்டபதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகிகள் ஸ்ரீராம், சுரேஷ், பரமசிவன், சங்கரகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு ஒரே நிலையில் ஊதியம் நிா்ணயம் செய்து ஆணையிட வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் கேட்டுள்ள ஊராட்சி செயலா்களுக்கு உடனே பணிமாறுதல் வழங்க வேண்டும்.

ஓராண்டு காலமாக சங்கத்தின் கோரிக்கைகள் மீது மாவட்ட நிா்வாகத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து விரைவில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.