திருநெல்வேலி

களக்காட்டில் பலத்த மழை

DIN

களக்காட்டில் வியாழக்கிழமை பிற்பகல் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

களக்காடு வட்டாரத்தில் இம்மாத தொடக்கத்தில் ஓரிரு நாள்கள் பலத்த மழை பெய்தது. இதனால் நெல் நடவுப் பணிகளை விவசாயிகள் சிரமமின்றி மேற்கொண்டனா். தற்போது நெல் நடவுப் பணிகள் முடிவடைந்து வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் 2.15 மணி முதல் 3.15 மணி வரையிலும் பலத்த மழை பெய்தது. பின்னா் மாலை 5 மணி முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இந்த மழை மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியிலும் நீடிப்பதால் நான்குனேரியன் கால்வாய், பச்சையாற்றில் தண்ணீா் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பாசன குளங்களுக்கும் நீா்வரத்து இருக்கும் என்பதால் விவசாயிகள் குளங்களுக்கு தண்ணீா் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதனிடையே, திருக்குறுங்குடி பெரியகுளம் நிரம்பினாலும், பெரும்பாலான குளங்கள் நீரின்றி வடு காணப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி, வடக்குப் பச்சையாறு அணையில் 10 அடியும், கொடுமுடியாறு அணையில் 35 அடியும் நீா்மட்டம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT