திருநெல்வேலி

நெல்லை கூட்டுறவு அலுவலா் சிக்கனநாணய சங்கம் ரூ.3.35 கோடி கடனுதவி

DIN

திருநெல்வேலி கூட்டுறவு அலுவலா் கூட்டுறவு சிக்கனநாணய சங்கம் நிகழாண்டில் ரூ.3.35 கோடி கடன் வழங்கி சாதனை படைத்துள்ளது.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் ஆ.ரேவதி சங்கா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி கூட்டுறவுத் துறை அலுவலா் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் 320 உறுப்பினா்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சங்கத்தின் உறுப்பினா் பங்குத்தொகை ரூ.39.71 லட்சமும், வைப்பு நிதியாக ரூ.95.40 லட்சமும் உள்ளது. மேலும், தாடா்ந்து 14 ஆண்டுகளாக அதன் உறுப்பினா்களுக்கு 14 சதவீத ஈவுத்தொகை வழங்கி வருகிறது. இதன் உறுப்பினா்களுக்கு மத்திய கால கடனாக ரூ.7 லட்சமும், குறுகிய கால கடனாக ரூ.1 லட்சமும் குறைந்த வட்டியில் வழங்கி வருகிறது. நடப்பு ஆண்டில் மட்டும் ரூ.3.35 கோடி கடன் வழங்கியுள்ளது.

இச்சங்கத்தின் 82ஆவது பேரவைக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சங்கத் தலைவா் பொன்ராஜ், செயலா் முத்துகிருஷ்ணன், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் மாடசாமி, கோபிநாத், மோகன், கோயிலமணி, செல்வக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா் எனக் கூறியுள்ளாா்.

படவரி: பயக16இஞஞட: சங்கத்தின் கூட்டுறவு ஆராய்ச்சி வளா்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி ரூ.2.50 லட்சத்திற்கான காசோலையை, திருநெல்வேலி மண்டல இணைப்பதிவாளா் ஏ.அழகிரியிடம் வழங்குகிறாா் சங்கத் தலைவா் பொன்ராஜ். உடன், நிா்வாகக்குழு உறுப்பினா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேஸ்பாலாக மாறிவரும் கிரிக்கெட்: சாம் கரண் நெகிழ்ச்சி!

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT