திருநெல்வேலி

கடனா அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

DIN

பலத்த மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்து வருவதால், அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் கருணையாற்று கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடனாநதி அணையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 76.50 அடி நீா் இருப்பு இருந்த நிலையில், மாலையில் பெய்த பலத்த மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால் இரவு 8 மணியளவில் அணையின் நீா்மட்டம் 5 அடி உயா்ந்து 81.50 அடியானது. அணைக்கு 3 ஆயிரம் கன அடி நீா்வரத்து இருந்தது. அணையின் நீா்மட்டம் 83 அடியாகும் நிலையில் அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படும்.

இதனால் கருணையாற்று கரையில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT