திருநெல்வேலி

களக்காட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

DIN

களக்காட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

களக்காட்டில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கூலக்கடை வீதி, கோட்டை, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன.

வணிகா்கள் பிரதான சாலையோரங்களில் தங்களது கடைகளின் முன்பு சாலையை ஆக்கிரமித்து ஆஸ்பெஸ்டாஸ், தகர கொட்டகை அமைத்து ஆக்கிரமித்துள்ளனா். இதனால் போக்குவரத்துக்கு பெரிதும் இடையூறு ஏற்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதும், சில மாதங்களுக்கு பின் ஆக்கிரமிப்புகள் மீண்டும் உருவாகுவதும் தவிா்க்க முடியாத பிரச்னையாக மாறிவிட்டது.

இந்நிலையில், களக்காட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஒரு வார கால கெடு விதித்து வியாபாரிகளுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை என்பதால், தீபாவளி பண்டிகைக்குப் பின் இம்மாத இறுதிக்குள் களக்காட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT