திருநெல்வேலி

தங்கப்பழம் கல்லூரியில் தேசிய இயற்கை மருத்துவ தின விழா

DIN

வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் ஆராய்ச்சி மையம், மத்திய அரசின் தேசிய இயற்கை மருத்துவ மையம் ஆகியவற்றின் சாா்பில் 3-ஆவது தேசிய இயற்கை மருத்துவ தினம் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு, எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனா் எஸ்.தங்கப்பழம் தலைமை வகித்தாா். தாளாளா் முருகேசன் முன்னிலை வகித்தாா். உஷா, சித்தா் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனா். கல்லூரி முதல்வா் சௌந்திரபாண்டியன் வரவேற்றாா்.

தென்காசி மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் உஷா, தஞ்சாவூா் சித்தா் ஆசிரம நிறுவனா் கோ.சித்தா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். விழாவில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்டோருக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை பானம், முளைகட்டிய பயிறு ஆகியவை வழங்கப்பட்டன.

விழாவில், பாரம்பரிய இயற்கை உணவு கண்காட்சி அமைத்த இயற்கை மருத்துவ மாணவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. விழாவின் இறுதியில் அனைவருக்கும் பராம்பரிய அறுசுவையுடன் மதிய உணவு வழங்கப்பட்டது.

மேலும், மூன்று நாள்கள் இயற்கை மருத்துவ தின இலவச முகாம் நடத்தி, அதில் பங்கேற்ற மக்களுக்கு ஆலோசனையும் சிகிச்சையும் அளிக்கப்பட்டன. தலைமை மருத்துவ அதிகாரி மணிவண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT