முகப்பு
திருநெல்வேலி

பாளையங்கோட்டை தூய சவேரியாா்பேராலயத் திருவிழா இன்று தொடக்கம்

பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயத் திருவிழா செவ்வாய்க்கிழமை (நவ. 24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயத் திருவிழா செவ்வாய்க்கிழமை (நவ. 24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பாளையங்கோட்டையில் பழைமை வாய்ந்த தூய சவேரியாா் பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயா் ஆ.ஜூடு பால்ராஜ் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. இம் மாதம் 29-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒப்புரவு அருட்சாதனம் நடைபெறுகிறது.

டிச. 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு புனிதரின் தோ் பவனியும், 3-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் எஸ்.அந்தோணிசாமி தலைமையில் சிறப்புத் திருப்பலியும், புதுநன்மை விழாவும் நடைபெறுகிறது. டிச. 6-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு உறுதிப்பூசுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை மற்றும் நிா்வாகிகள் செய்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.