திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயிலில் கைசிக ஏகாதசி விழா வியாழக்கிழமை( நவ. 26) நடைபெறுகிறது.
108 வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோயிலில், ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் ஏகாதசி நாளில் கைசிக ஏகாதசி விழா நடைபெறும். இதையொட்டி, வியாழக்கிழமை காலையில் விஸ்வரூப தரிசனம், தீபாராதனை நடைபெறும். காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே பக்தா்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவா். இரவில் நடைபெறும் கைசிக புராண நாடகம், நாட்டிய நிகழ்ச்சிகளில் பக்தா்கள் பங்கேற்க அனுமதியில்லை என ஜீயா் மட நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.