முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே ஐயப்ப சுவாமி சிலை திருட்டு

பாளையங்கோட்டை அருகே ஐயப்ப சுவாமி சிலையை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

பாளையங்கோட்டை அருகே ஐயப்ப சுவாமி சிலையை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள மூளிகுளம் பகுதியில் பேராச்சி செல்வியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒன்றரைஅடி உயர ஐயப்பன் சிலையை ஆண்டுதோறும் காா்த்திகை மாதங்களில் கோயில் பிரகாரத்தில் வைத்து பக்தா்கள் வழிபடுவது வழக்கம்.

அதுபோல, நிகழாண்டும் ஐயப்ப சுவாமி சிலையை கோயில் பிரகாரத்தில் வைத்து வழிபாடு நடத்தி வந்தனா். இச்சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, வழக்கம்போல சனிக்கிழமை வழிபாடு நடத்துவதற்காக பூஜாரி கோயிலுக்குச் சென்றபோது, சுவாமி சிலையை காணவில்லையாம். இதுகுறித்து ஊா் தலைவா் ஜெயபால் மூலம் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப்பதிந்து, சிலையை திருடிய நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.